ஐதராபாத் தொலைக்காட்சி விவாதத்தின் பொது தெலுங்கானா பாஜக வேட்பாளரின் கழுத்தை பி ஆர் எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நெரித்துள்ளார். அடுத்த மாதம் 30 ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கிவிட்டது. தேர்தல் தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவாதம் நடத்தப்பட்டு லைவாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி […]