மத்திய அரசின் யாத்திரைக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு| Election Commission Controls Central Govt Yatra

புதுடில்லி,:அடுத்த ஆண்டு, ஏப்ரலில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் விரைந்து பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில், ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ரதம், நாடு முழுதும் சென்று பயனாளிகளை பதிவு செய்யும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த திட்டத்தை, சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வரும் டிச., 5ம் தேதி வரை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.