விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை எதிர்ப்போம்: காங்., தலைவர் கார்கே| Rajasthan Elections 2023: Enforcement, CBI, IT Raid: We oppose misuse of investigative bodies: Congress, President Mallikarjuna Kharge

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ”அமலாக்கத்துறை, சி.பிஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து போராடுவோம்” என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: ராஜஸ்தானில் நிச்சயம் தோல்வி அடைவோம் என்பதே பா.ஜ., தெரிந்து கொண்டது. தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்துகிறது. சத்தீஸ்கரை அடுத்து, ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாஜ., அரசின் சர்வாதிகாரம் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அமலாக்கத்துறை, சி.பிஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவோம். பொதுமக்கள் பாஜ.,வுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.