சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான் தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா? சுயதொழில் தொடங்க பல வாய்ப்புள்ள தொழில்கள் உள்ளன. அந்த வகையில் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் தொழில் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் சிறுதானியத்தில் ஐஸ்க்ரீம் தயாரிப்பு என்பது ஒரு புதிய ஐடியாவாக இருந்து வருகிறதுடன் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு பசுமை விகடன் வழிகாட்டுகிறது.
பசுமை விகடன், பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய நூடுல்ஸ் நெய், பால்கோவா, பனீர் ஆகியவற்றில் “லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல் நேரடி பயிற்சி” வகுப்பை நடத்த உள்ளது.

நூடுல்ஸ் தயாரிக்க மைதா மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது சிறுதானிய நூடுல்ஸ் செய்யும் பயிற்சியும் இதில் வழங்கப்பட உள்ளது. மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றி விற்பனை செய்யும்போது அதிக நாள்கள் தாக்குப் பிடிப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது.
விவசாயிகள் மட்டும் அல்ல, தொழில்முனைவோரும் மதிப்புக் கூட்டிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி தொழில் செய்து, லாபம் பார்க்கலாம். அதற்கு இந்த மதிப்புக்கூட்டல் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டால் வெற்றிகரமான தொழில் முனைவோராக முடியும்.
இந்த பயிற்சி வகுப்பில்…
-
குறைந்த முதலீட்டில் ஐஸ்க்ரீம் மற்றும் சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறைகள்.
-
பாலை மதிப்புக்கூட்டி நெய், பனீர், பால்கோவா தயாரிக்கும் முறைகள்.
-
மதிப்புக்கூட்டும் தொழில்கள் தொடங்க வங்கிக் கடன்கள் குறித்த ஆலோசனைகள்.
-
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள பிஸினஸ் இன்குபேஷனில் உறுப்பினர் ஆவதற்கான வழிகாட்டல்கள்.
என இன்னும் அதிகமான நுட்பங்களை பயிற்சி வகுப்பில் அறியலாம்.

கட்டண விவரங்கள்…
பயிற்சிக் கட்டணம்: ரூ. 999/- மட்டும்.
பயிற்சியில் நோட்பேட், பேனா, சான்றிதழ், தேநீர், மதிய உணவு வழங்கப்படும்.
கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம் மூலம் கட்டணம் செலுத்த மேலே உள்ள க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள், கட்டணம் செலுத்துங்கள்.
கட்டணம் செலுத்திய பின் அதன் விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். கூடுதல் விவரங்களுக்கு இதே எண்ணைத் தொடர்பு கொள்ளளுங்கள்.
பயிற்சி நடைபெறும் நாள், இடம்…

நாள்: 31-10-2023 செவ்வாய்க்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
அலமாதி/ கொடுவெளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம்.