சென்னை சென்னையில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசாலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பியது தொடர்பான வீடியோ […]
