சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும் கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும் கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்துவிட […]
