டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், […]