கராச்சி,
பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டில், அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருகிறது.
இதன்பின்பு, அந்நாட்டு நாடாளுமன்றம் நடப்பு ஆண்டின் ஆகஸ்டு 9-ந்தேதி கலைக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்தது. இதன்பின்பு, 90 நாட்களுக்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறி தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், தேர்தல் நடத்துவது தள்ளி போய் வந்தது. இந்நிலையில், இறுதியாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தேதியை பற்றிய விவரங்களை சுப்ரீம் கோர்ட்டில் பகிர்ந்து கொண்டார் என தெரிவித்து உள்ளது.