இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்பு படையினரின் ஆயுதக்கிடங்கை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதை அடுத்து, பதற்றம் நிலவுகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மே மாதம் கூகி – மெய்டி பிரிவினரிடையே, இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் இம்பால் மேற்கு மாவட்டத்தில், கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் அலுவலகம் அருகே உள்ள மணிப்பூர் போலீசாரின் ஆயுதக் கிடங்கை நேற்று முன்தினம், 2,000க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் முற்றுகையிட்டது.
அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்ததால் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் முடங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement