சினிமா திருட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி : 12 தனி அதிகாரிகள் நியமனம்

புதிய படங்கள் வெளிவரும்போது வெளியாகும் அன்றே அந்த படங்கள் ஹெச்டி தரத்தில் இணையதளங்களில் வெளியாகின்றன. கடுமையான சட்டங்கள் இருந்தும் இதனை தடுக்க முடியவில்லை. இதனால் சினிமாத்துறைக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வரியும், வராமல் போகிறது. இதன் காரணமாக தீவிரமான நடவடிக்கை எடுக்க விரும்பிய மத்திய அரசு சினிமாட்டோகிராப் திருத்த சட்டம் 2023ஜ நிறைவேற்றியது.

தற்போது இதனை தீவிரமாக கண்காணிக்கவும், தீவிரப்படுத்தவும் 12 கண்காணிப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இது குறித்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருப்பதாவது: யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் தங்கள் சினிமா திருட்டுத்தனமாக ஒளிபரப்பாவதை தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்தவர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையும், 3 லட்சம் முதல் படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரையும் அபராதம் விதிக்கப்படும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.