சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியடன் உடன் இணைந்து கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். […]