புதுடெல்லி: இந்தியாவில் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் வெளிவந்துள்ளது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் 2 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- மீடியாடெக் டிமன்சிட்டி 6020 ப்ராஸசர்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 6.56 இன்ச் ஹெச்.டி+ டிஸ்பிளே
- பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதள அப்டேட்டுக்கு உறுதி அளித்துள்ளது லாவா
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது
- இந்த போனின் தொடக்க விலை ரூ.9,999
Introducing the Lord Of 5G – Blaze 2 5G!
Starting ₹9,999
Sale starts on Amazon from 9th November!Register for the sale: https://t.co/49J1HKdjnJ
*T&C Apply#LordOf5G #Blaze25G #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/3W75XGVnO9
— Lava Mobiles (@LavaMobile) November 2, 2023