டைகர் 3 படத்தில் இணைந்த ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன்!

'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப் இருவரும் இணைந்து 'டைகர்' மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர். மனிஷ் சர்மா இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நவம்பர் 12ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் யாஷ் சினிமா யூனிவர்சல் இடம் பெறுவதால் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை தொடர்ந்து தற்போது இதில் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.