இலங்கையில் உள்ள கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மீன் இறக்குமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்
கடல் உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையில் தற்போது பல பிரச்சனைகள் காணப்படுவதாகவும் அவை ஆராயப்பட வேண்டும் என்றும் கூறியதுடன் வெளிநாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் தரமற்ற மீன்களை இறக்குமதி செய்து தயாரிக்கப்படும் மீன் ரின் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை தடை செய்வது மற்றும் ஐஸ் கட்டிகளுக்கு நியாயமான விலையை தீர்மானிக்க வேண்டியது போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.