Batticaloa Campus , இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளது.
இதன் ஆரம்ப விழா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இப்பல்கலைக்கழகத்தை நிறுவிய கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிசுல்லா அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (04) Batticaloa Campus வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், Batticaloa Campus உபவேந்தர், அதன் தலைவர்கள் உள்ளிட்ட் பேராசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.