சென்னை: விஜய்யின் லியோ படத்தில் கமல்ஹாசன் ஏஜென்ட் விக்ரமாக வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். இதன்மூலம் விக்ரம் 2ம் பாகத்தில் கமலுடன் விஜய்யும் கூட்டணி வைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசியலில் விஜய்யுடன் கூட்டணி வைக்க கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்புவிடுத்துள்ளார். மேலும், அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், விஜய்க்கு கமல் சீரியஸ்ஸாக அட்வைஸ் செய்துள்ளார்.
