புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் எலக்ட்ரிக் கடைக்குள் புகுந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
வடகிழக்கு டில்லி துர்காபுரி சக்கார் பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்திருப்பவர் சச்சின் குப்தா. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு இவரது கடைக்கு நான்கு பேர் வந்தனர், துப்பாக்கியைக் காட்டி சச்சினை மிரட்டி, 2.5 லட்சம் ரூபாய் பணம், வங்கி காசோலை புத்தகம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement