டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்தது, அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டி இருக்கிறார். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. புதிதாக டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில்,” டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும், சத்யேந்தர் ஜெயினும் சிறை அதிகாரிகள் மூலம் எனக்கு மனரீதியாக கடுமையான நெருக்கடியும் , சித்ரவதையும் கொடுக்கின்றனர். என்னிடம் இருக்கும் பென் டிரைவ் மற்றும் டேட்டாக்களை சிறை அதிகாரிடம் கொடுக்கும்படி நெருக்கடி கொடுக்கின்றனர்.

அவர்களது கோரிக்கைக்கு அடிபணியாவிட்டால் விஷம் வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் சொல்படி கேட்கவில்லையெனில் என்னை 13வது நம்பர் சிறைக்கு மாற்றி கொலை செய்துவிடுவதாக கூறுகின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கைக்கு அடிபணியாத காரணத்தால் என்னை 13வது சிறைக்கு மாற்றிவிட்டனர்.
அதன் அருகில் தான் டெல்லியில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டுள்ளார். எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி அரசின் நெருக்கடி இல்லாத வேறு ஒரு சிறைக்கு என்னை மாற்றவேண்டும். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாநில உள்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் கமிட்டி என்னிடம் வாக்குமூலம் வாங்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் ஆளுநருக்கு சுகேஷ் அக்கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.