கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் எனப் பலரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இப்படத்தின் உருவாக்கம் குறித்து ஆனந்த விகடன் இதழுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியிலிருந்து…
-
ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடியிருக்கேன். அப்படிப் பார்த்தவர்களில் லாரன்ஸ் ஒருத்தர்.
-
‘ஜிகர்தண்டா 2’ ன்னு சொன்னால் அதோட தொடர்ச்சியான இரண்டாம் பாகம்னு பார்ப்பாங்க. ‘பார்ட் 2’-ன்னு சொல்லலாம். ஆனால் அப்படியே ‘பார்ட் 2-ம் கிடையாது. புதுசாகவும் இருக்கணும். அதனால் மனசிற்குள் வந்த புதுப் பெயர்தான் ‘டபுள் எக்ஸ்.’
-
லாரன்ஸுக்கு எதிராக சரியான ஆள் வேணும். முதல் பிரதி ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சதுமே எனக்கு இதில் எஸ்.ஜே.சூர்யாதான்னு ஆகிப்போச்சு.

-
படத்தில் ஒரு டைரக்டராக நடிக்கணும்னு சொன்னபோது கொஞ்சம் யோசிச்சாரு. மறுபடியும் எங்கள் சந்திப்பு, லாரன்ஸ் சொன்னது எல்லாம் கேட்டுட்டு தயாராகி வந்திட்டார்.
-
இரண்டு பேருமே அவ்வளவு நேர்த்தியாக விட்டுக்கொடுத்து நடிச்சாங்க. இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங் கேரக்டர்ஸ். தனித்தனியே அவங்களுக்கான அடையாளங்கள் இருக்கு. அவங்களுக்குள்ளே முட்டல், மோதல், அன்பு என்று படத்தில் நடந்துக்கிட்டே இருக்கும். அடிக்கடி இரண்டு பேருமே ஒருத்தரையொருத்தர் பாராட்டிக்குவாங்க.
-
முன்னாடி இருந்த மதுரையை மறுபடியும் கொஞ்சம் ரீக்ரியேட் பண்ணியிருக்கோம். பழங்குடியினர் கிராமம், மதுரை வீதிகள்னு கொஞ்சம் பாடுபட்டிருக்கோம். சினிமாவைக் கொண்டாடுவதில் இன்னிக்கு வரைக்கும் முதலிடத்தில் நிற்பது மதுரைதான். இந்திப் படங்கள், பாடல்கள், இங்கிலீஷ் படங்கள்னு வித்தியாசம் பார்க்காமல் கொண்டாடி வந்திருக்காங்க. இளையராஜா வர்றதுக்கு முன்னாடி மதுரை ரசித்த பாடல்கள் எல்லாம் வேற மாதிரி இருந்திருக்கு.
-
நிமிஷாவை ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பார்த்திட்டு அசந்துபோயிருக்கேன். அப்படிப் பார்த்ததுதான் அவர் நடிச்ச ‘சோழா’ படம். இதில் இவர்தான்னு அப்பவே முடிவு பண்ணியாச்சு.
-
தன்னை நம்பி முழுசாக ஒப்படைக்கிற மனசுக்கு ஒரு நல்ல மியூசிக்கை அதிரடியாகத் தரணும்னு சந்தோஷ் விரும்பி விரும்பி வேலை செய்திருக்கார். ரொம்ப நாளாக ஊறிக்கிடந்த கதை, அவர் இசையில் எனக்கு இன்னும் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
-
எஸ்.திருநாவுக்கரசின் கேமரா வியூ ஃபைண்டரில் பார்த்தால் காட்சிகள் ‘அடடா’ன்னு இருக்கு. நிச்சயம் ஸ்கிரீன்ல பிரமாண்டமான ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும்.
ஆனந்த விகடனின் வெளிவந்த முழு நேர்காணலைப் படிக்:
லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா… ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டென்ஷன் கூட்டணி!