சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீபாவளிக்கு பாயசம் வைக்க வாங்கிய சேமியா பாக்கெட்டில் செத்துப்போன தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்த பூமிநாதன் அருகில் உள்ள ராம் நகரில் உள்ள மளிகை கடையில் பிரபல நிறுவனமான அணில் சேமியா தயாரிப்பு சேமியா பாக்கெட்டை வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று சேமியா பாக்கெட்டை பிரித்துப் பார்த்ததில் அதில் செத்துப்போன தவளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்காரரிடம் விசாரித்ததில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு […]
