வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று யோசனைகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன – வர்த்தக அமைச்சர்

வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று யோசனைகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் முதலாம் நாளான இன்று (14) விவாதத்தில் கலந்து கொண்டு வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மற்றும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டிற்கு புதிய நம்பிக்கையை அளித்து, புதிய பார்வையுடன் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நலின் பெர்னாண்டோ, நடைமுறைப்படுத்தப்படாத பிரேரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விரிவான பகுப்பாய்வை முன்வைக்காது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சில முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான், ஆனால் அந்த முன்மொழிவுகள் என்ன என்பது தொடர்பில், எதிர்க்கட்சிகள் விரிவாகக் கூறவில்லை.

வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வன முகவர் நிறுவனம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அதற்கான வரைவுகளை தயாரித்து அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பித்து சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு. பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறையாகவே இருந்தது. ஆனால் இந்த வருட காலாண்டின் இறுதியில் அதனை மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் 65மூ சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள். அவர்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் இல்லை. அதனாலேயே அவர்களுக்காக விசேட கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடன் தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, அத்தகையவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

பெரிய அளவிலான வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யும் போது, சிறு வணிகர்களை ஈடுபடுத்தும் முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். கைத்தொழில் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை வரவு செலவு திட்டத்தல்; உணவு பாதுகாப்புக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும், மீன்பிடி தொழிலை அதிகரிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.