Smart City Ranking: Madurai at 8th position | ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப்பட்டியல்: 8 வது இடத்தில் மதுரை

புதுடில்லி: திட்டங்கள் நிறைவு மற்றும் நிதி பயன்பாடு அடிப்படையில், ‛ஸ்மார்ட் சிட்டி ‘ தர வரிசை பட்டியலில் குஜராத்தில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மதுரை நகரம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் வேறு எந்த தமிழக நகரங்களும் இடம் பிடிக்கவில்லை.

இந்தியாவின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛ ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை கடந்த 2015 ல் கொண்டு வந்தது. இதில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு 2024 ஜூன் வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. இந்த நகரங்களில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1.70 லட்சம் கோடி மதிப்பு கொண்ட 1,745 பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய 6,202 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் திட்டங்கள் நிறைவு, நிதி பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 126 நகரங்கள் தரவரிசைபடுத்தப்பட்டு உள்ளன.

அந்த தர வரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ள நகரங்கள் பின்வருமாறு

01. சூரத்(குஜராத்)

02. ஆக்ரா( உ.பி.,)

03. ஆமதாபாத்(குஜராத்)

04. வாரணாசி(உ.பி.,)

05. போபால்(ம.பி.,)

06. தும்குரு(கர்நாடகா)

07. உதய்ப்பூர்(ராஜஸ்தான்)

08. மதுரை(தமிழகம்)

09. கோடா(ராஜஸ்தான்)

10. சிவமோகா( கர்நாடகா)

பின் தங்கிய நகரங்கள்

அதே நேரத்தில், இந்த தரவரிசை பட்டியலில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு நகரங்கள் ஆகியவை பின்தங்கி உள்ளது.

அதன்படி கடைசி 10 இடங்களில் இடம்பெற்றுள்ள நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:

கவரட்டி ( லட்சத்தீவு)

புதுச்சேரி

போர்ட் பிளேர்(அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்)

இம்பால்(மணிப்பூர்)

ஷில்லாங்( மேகாலயா)

டியு

கவுகாத்தி(அசாம்)

அயிஸ்வால்(மிசோரம்)

காங்டாக்(சிக்கிம்)

பஷிகட்(அருணாச்சல பிரேதேசம்) ஆகியன இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ” பின் தங்கிய நகரங்கள் அனைத்தும் சிறிய நகரங்கள். 2024 ஜூன் மாதத்திற்குள் இங்கு பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம்” என்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.