Australia vs South Africa: மும்பையில் நடந்த முதல் அரையிறுதி போட்டிக்கு பிறகு, இரண்டு வலிமைமிக்க கிரிக்கெட் அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா 2023 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைய கடுமையாக போராட உள்ளன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் 50 ஓவர் உலகக் கோப்பை நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 1999 மற்றும் 2007ல் இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர். அந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றது. நவம்பர் 16 இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023ன் அரையிறுதியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
Rivalries resume as two fabled foes clash for a spot in the AvAUS pic.twitter.com/53wq4CrVmd
— ICC (@ICC) November 16, 2023
தென்னாப்பிரிக்கா லீக் ஆட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் லீக்கில் விளையாடிய 9ல் 7 போட்டிகளை வென்றது. மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா இருந்தது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய ஆஸ்திரேலியா அணி பின்னர் சுதாரித்து அரை இறுதி வரை தகுதி பெற்றுள்ளது. இதுவரை, ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் ஆஸ்திரேலியா 3 வெற்றி, தென்னாப்பிரிக்கா 3 வெற்றி, ஒரு போட்டி டை ஆனது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த முறையும் பைனலுக்கு செல்ல போராடி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர் மற்றும் கடைசி 18 ODI போட்டிகளில் 15ல் வெற்றி பெற்றுள்ளனர்.
2023 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் மதியம் 2 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி எச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் பிற மொழி சார்ந்த சேனல்கள் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும். டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை இலவசமாகப் பார்க்கலாம். அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு Disney+ Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். போட்டியை ஹாட்ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கலாம்.
உத்ததேச அணி:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி என்கிடி