சென்னை: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். தக் லைஃப் என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் கமலுடன் நடிப்பது குறித்து துல்கர் சல்மான் மனம் திறந்துள்ளார். அதேபோல், கமல்ஹாசன் வரிசையில் அவர் இன்னொரு பிரபலம் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.
