Honda CB350 – ₹.2 லட்சத்தில் 2023 ஹோண்டா CB350 பைக் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக புதிய CB350 பைக் விற்பனைக்கு ரூ.1,99,900 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் கிளாசிக் 350 பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

CB350 DLX மற்றும் CB350 DLX Pro என இருவிதமான வேரியண்டுகளை பெற்றதாக அமைந்துள்ளது.

2023 Honda CB350

ஹோண்டாவின் சிபி350 பைக்கில் 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கிளாசிக் 350 பைக்கில் உள்ளதை போன்றே டெலிஸ்கோபிக் ஃபோர்க்கின்ற கவர் ஆனது சேர்க்கப்படுள்ளது. DLX வேரியண்டில் பேர்ல் இக்னியஸ் பிளாக் நிறமும், DLX ப்ரோ வேரியண்டில் மேட் க்ரஸ்ட் மெட்டாலிக், மேட் டூன் பிரவுன், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும்  ரெட் மெட்டாலிக் என நான்கு நிறங்கும் கிடைக்கின்றது.

DLX Pro வேரியண்டில்  கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.

விற்பனையில் உள்ள ஹைனெஸ் சிபி 350 பைக்கை விட ரூ.10,000 வரை விலை குறைவாக துவங்குகின்றது.

2023 Honda CB350 DLX – Rs 1,99,900

2023 Honda CB350 DLX Pro – Rs 2,17,800

new honda cb 350 bike 2023 new honda cb 350 bike price

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.