
நவ 23ம் தேதி வெளியாகும் அனிமல் படத்தின் டிரைலர்
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள ஹிந்தி திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த வாரத்தில் இதன் டிரைலர் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் நவம்பர் 23ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.