
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்
சென்னை: பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடை தொடர்புடைய வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரி தொடர்புடைய இடங்களில் கடந்த 20 ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பிரணவ் ஜூவல்லரிக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையின் போது 11.60 கிலோ தங்கம் சிக்கியது. இவ்வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.