மனைவி தவறாக நினைக்க மாட்டார்: அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சபாநாயகன்'. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சவுத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஷெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பல யு-டியூபர்கள் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது : 'சபாநாயகன்' ஜாலியான படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போதுதான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம்.

முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள். நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக இருப்பதோடு, ஒரு நாஸ்டால்ஜி பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும்.

இந்த படத்தில் எனக்கு மூன்று நாயகிகள். இதற்கு முன் 'மன்மதலீலை' படத்திலும் மூன்று நாயகிகள் இருந்தார்கள், 'ஓ மை கடவுளே' படத்தில் இரண்டு நாயகிகள். இப்படியான வாய்ப்பு எனக்கு வருகிறது. நான் தேடிப்போகவில்லை. கதைப்படி எல்லா படத்திலும் நாயகிகளுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். இதற்காக என் மனைவி கீர்த்தி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.