சென்னை: லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது விஸ்வரூபம் எடுத்தது. அப்போது நடிகை மனிஷா யாதவ்க்கு இயக்குநர் சீனுராமசாமி கொடுத்த பாலியல் தொல்லை குறித்தும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் இயக்குநர் சீனு ராமசாமி தனது விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் சீனுராமசாமியின் சுயரூபத்தை மனீஷா யாதவ் அம்பலப்படுத்தியுள்ளார்.
