விபத்தில் சிக்கினாரா விராட்…? மூக்கில் வெட்டு, கண்ணில் காயம் – வைரலாகும் புகைப்படம்!

Virat Kohli Viral Photo: விராட் கோலியை கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்தான் பார்த்திருப்போம். அதற்கு பின் சமூக வலைதளங்களை தவிர பெரிதாக அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை எனலாம். நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்காக வழக்கம் போல் கடுமையாக முயன்ற விராட் கோலிக்கு கைக்கெட்டிய தூரத்தில் இருந்த கோப்பையை தவறவிட்டது சற்று ஏமாற்றமாகவே இருக்கும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் (IND vs AUS T20I) அனுபவ வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலியும் இதில் இடம்பெறவில்லை.

இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி (Virat Kohli). அவரின் இந்த ஃபார்ம் அவரை டி20 அணியில் தொடர்ந்து தக்கவைத்துள்ளதாகவே தெரிகிறது. விராட் டெஸ்டில் தொடர்ந்து விளையாடுவார் என்றபோது, 2025ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில்கொண்டு அவர் ஒருநாள் அணியிலும் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கிறார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பாரா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.

வைரலான ஸ்டோரி

இந்த நிலையில், விராட் கோலி நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை (Virat Kohli Instagram Story) பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை முதலில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர் எனலாம். மூக்கில் பிளாஸ்திரி, கண் உள்பட முகத்தில் சிறு சிறு காயங்களுடன் விராட் கோலி அந்த புகைப்படத்தில் காணப்பட்டார். 

What’s Virat Kohli upto?
King Kohli latest Instagram story. pic.twitter.com/EE6C00FuyU

— Mufa (@MufaKohlii) November 27, 2023

இருப்பினும், அதில் வெள்ளை நிற டி-ஷர்டில் இரு விரல்களை காண்பித்து அவரின் டிரேட்மார்க் சிரிப்புடனே விராட் காணப்பட்டார். எனவே, இந்த புகைப்படம் உண்மையா போலியா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. மேலும், விராட் அந்த ஸ்டோரியில் புகைப்படத்தின் கீழ் பகுதியில்,”நீங்கள் அந்த இன்னொரு நபரையும் பார்த்தாக வேண்டும்” (You should see the other guy) என குறிப்பிட்டிருந்தார். 

பதறிய ரசிகர்கள்

அவரின் அடுத்த ஸ்டோரியை பார்த்தபோதுதான், இது அவர் விளம்பரத் தூதராக இருக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பர யுக்தி என தெரியவந்தது. அந்த நிறுவனத்தில் தற்போது நடைபெற கொண்டிருக்கும் Black Friday தள்ளுபடி விற்பனை சார்ந்து இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுசார்ந்த மற்றொரு விளம்பரத்தில் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோரின் வீடியோவும் அவர் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். 

எனவே, விராட் கோலிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, அது வெறும் விளம்பர யுக்திதான் என்பது உறுதியானது. ஆனால், ரசிகர்கள் அதற்குள் தங்கள் ‘தலைவனுக்கு’ என்ன ஆகிவிட்டது என்ற பதறி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். பின்னர் அவர்களுக்கு அதன் உண்மை பின்னணி புரிந்துவிட்டது எனலாம்.

ஆர்சிபியில் தொடரும் கோலி

2024 ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை (IPL Auction 2024) முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) விராட் கோலியை தக்கவைத்துக்கொண்டது. மேலும், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு வீரர்களை தக்கவைத்துக்கொண்டாலும், ஹசில்வுட், ஹசரங்கா போன்றோரை விடுவித்தது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், ரூ.17.50 கோடிக்கு கேம்ரூன் கிரீனை மும்பையிடம் இருந்து ஆர்சிபி அணி டிரேடிங் மூலம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.