புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கு இணையவழி (online) ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேன்முறையீடுகளுக்கு 2023.11.07 ஆம் திகதி முதல் 2023.12.04 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி, பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் School Login உள்நுழைந்து மேன்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.