பியாங்யாங்,
வடகொரியாவில் விமானப்படை வீரர்கள் தினத்தையொட்டி, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு நேரில் சென்றார். இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்கள் வான் சாகசங்களை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது, போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார். எதிரிகளின் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு வடகொரிய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
Related Tags :