Honda Cars – 2023 நவம்பரில் ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை 24 % உயர்வு

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு நவம்பர் 2023ல் 24 % வளர்ச்சி அடைந்து 8,734 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 7,051 ஆக இருந்தது.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

Honda cars sales report November 2023

ஹோண்டா கார் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்து 3,161 யூனிட்களாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 726 யூனிட் மட்டுமே ஆகும்.

HCIL இயக்குனர் (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) கூறுகையில், “எங்கள் புதிய தயாரிப்பு பண்டிகைக் காலம் முழுவதும் சிறப்பான வரேற்பினை கண்டது. எங்களின் புதிய எலிவேட் மிகவும் உயர்ந்த வாடிக்கையாளர்களின் கருத்தில் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.