புதுடில்லி : தேர்தல்களின்போது, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள், ‘நோட்டா’ எனப்படும் யாருக்கும் ஓட்டில்லை என்ற வாய்ப்பை பயன்படுத்த முடியும். 2013ல் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள், 49ஓ என்ற விண்ணப்பத்தை அளிக்கும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், இதில், ஒருவர் யாருக்கும் ஓட்டளிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரியும்.
இதையடுத்தே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர்களுடன், நோட்டாவும் இடம்பெறத் துவங்கின.
தற்போது தேர்தல் முடிவு வெளியான நான்கு மாநிலங்களில், சத்தீஸ்கரில் அதிகபட்சமாக, 1.29 சதவீத வாக்காளர்கள் நோட்டா வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தில், 0.99 சதவீதம், தெலுங்கானாவில், 0.74 சதவீதம், ராஜஸ்தானில், 0.96 சதவீதம் பேர் நோட்டா வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement