Best Smartphones In December 2023: புத்தாண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கப்போகிறது. கடந்த 11 மாதங்கள் கண்டிப்பாக என்னைப் போல உங்களுக்கும் வேகமாக உருண்டொடியிருக்கும். அடுத்தாண்டு பலரும் புத்துணர்ச்சியுடன் தொடங்க விரும்புவார்கள், அதிலும் குறிப்பாக தங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்களை இந்த சமயத்தில் புதிதாக மாற்றிக்கொள்ள விரும்புவார்கள்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு தள்ளுபடி விற்பனைகள் ஆன்லைன்களிலும், ஸ்டோர்களிலும் வழங்கப்படும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின், ஏசி, பைக், ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் என பல மின்னணு பெரும் விலை குறைப்பில் கிடைக்கும்.
அந்த வகையில், நடப்பு டிசம்பர் மாதத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறிப்பாக, IQOO, Oneplus, Samsung, Motorala உள்ளிட்ட நிறுவனங்களின் லேட்டஸ்ட் மாடல்களை இங்கு காணலாம்.
iQOO Z7 Pro 5G
iQOO Z7 Pro மொபைலை நீங்கள் 25 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கிறது. இந்த மொபைல் உயர்மட்ட அம்சங்களை வழங்குகிறது. இது 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இந்த இரண்டு வேரியண்டிலும் 8ஜிபி RAM உடன் வருகிறது. வளைந்த 120Hz AMOLED டிஸ்ப்ளே, துடிப்பான வண்ணங்கள் மற்றும் மெலிதான பெசல்கள் ஆகியவற்றைக் கொண்டு அதன் வடிவமைப்பு கண்ணைக் கவரும். 64MP பிரதான கேமரா உடன் வருகிறது. 4,600mAh பேட்டரி மிகப்பெரியதாக இருக்காது. ஆனால் அது வேலையைச் செய்கிறது, மேலும் 66W வேகமான சார்ஜிங் உள்ளிட்ட சார்ஜர் ஒப்பந்தத்தை இனிமையாக்குகிறது.
Samsung Galaxy M34 5G
இந்த மொபைல் ரூ.25 ஆயிரத்திற்கு கிடைக்கக் கூடியது. இந்த மொபைல் 6,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த விலை வரம்பில் இதுதான் உட்பட்ச பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. திறமையான Exynos 1280 சிப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. OneUI இன்டெர்ஃபேஸ் உள்ளது. மேலும் கேமரா பலரையும் ஈர்க்க கூடியது. 25 ஆயிரம் ரூபாய்க்குள் நீங்கள் மொபைலை வாங்க நினைத்தால் இதற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
OnePlus Nord CE 3 5G
இந்த OnePlus மொபைல் ரூ.25 ஆயிரத்திற்குள்ளும் வாங்கலாம். உங்களிடம் OneCard கிரெடிட் கார்டு இருந்தால், மேலும் ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம். இதன்மூலம், இந்த மொபைலின் 12 ஜிபி RAM வேரியண்ட் கூட 25 ரூபாய்க்கு சற்று அதிகமாக வாங்க முடியும். மேலும், இந்த மொபைலின் டிசைன் பலரையும் கவர்ந்துள்ளது. சமீபத்திய Snapdragon 782G பிராஸஸருடன் வருகிறது. சுவாரஸ்யமாக, 5,000mAh பேட்டரி மிதமான பயன்பாட்டுடன் ஒரு நாளுக்கு மேல் எளிதாக நீடிக்கும்.
Motorola Edge 40 Neo 5G
இந்த நிறுவனத்தின் இந்த வகையிலான மொபைல்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் பட்ஜெட்தான். ரூ. 25,000 விலையில் பல அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆகும். IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் ஃபோன், விரைவான 68W சார்ஜிங்குடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் கேமராவும் பல நுணக்கங்களுடன் வருகிறது.