மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் தனது வீட்டை மழை நீரை சூழ்ந்துவிட்டதாகவும் உதவி செய்யுமாறு தனது X வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று விஷ்ணு விஷாலையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவத்துக்காகத் தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். இதற்காக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
After gettting to know our situation through a common friend,
The ever helpful Ajith Sir came to check in on us and helped with travel arrangements for our villa community members…Love you Ajith Sir! https://t.co/GaAHgTOuAX pic.twitter.com/j8Tt02ynl2— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023
பாதுகாப்பான இடத்திற்கு வந்த நடிகர் விஷ்ணு விஷால் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் மனப்பான்மை குணம் கொண்ட நடிகர் அஜித் சார் எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கும், எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார் ” என தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.