பெங்களூரு,
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 என பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :