களத்தில் இறங்கிய கேபிஒய் பாலா – கோடிகளில் வாங்கும் நடிகர்கள் எங்கே….

விஜய் டிவி பிரபலமான பாலா சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் என்ட்ரியாகி நடித்து வருகிறார். தனக்கு கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை அறப்பணிகளுக்காக செலவு செய்யும் பாலா, தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலருக்கு நிவாரண தொகை வழங்கியுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கியுள்ளார்.

இதற்காக தனது வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ 2.15 லட்சத்தை பணத்தை பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை வாழவைத்த சென்னை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி என்று கூறியுள்ளார். பாலாவின் இந்த சேவையில் நடிகர் அமுதவாணனும் கலந்து கொண்டார். இதனையடுத்து இருவரையும் பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பாலா சாதாரண சின்ன நடிகர் தான். அவர் சம்பளம் பெறுவது லட்சங்கள், கோடிகளில் அல்ல. காமெடி நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், தொகுப்பாளர் என தனது திறமையை வெளிப்படுத்தி கிடைக்கும் வருவாயிலும் பெரும்பகுதியை சமூக பணிகளுக்காக செலவிடுகிறார். பாலாவின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேசமயம் 25 கோடி, 50 கோடி, 100 கோடி என கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களோ அமைதியாக இருக்கிறார்கள். மக்கள் இப்பவாவது புரிந்து கொள்ள வேண்டும் யார் ரியல் ஹீரோக்கள் என வலைதள வாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.