வெனிசுலா அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி – அதிபர் தகவல்

ஜார்ஜ்டவுன்,

வெனிசுலாவுடனான கயானாவின் எல்லைக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது, அப்பகுதியில் மோசமான வானிலை இருந்ததாக அதிகாரிகள் கூறினர். நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் அது சமூக விரோத செயலாக இருக்குமோ என்று கேள்வி எழுந்திருந்தது. .

இந்த சூழலில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பணியாளர்கள், வெனிசுலா தனக்கே சொந்தமானது என உரிமை கோரும் எல்லைப் பகுதியைக் காக்கும் ராணுவத்தின் ஆய்வுக்கு ஐந்து மூத்த அதிகாரிகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர் என்று ராணுவத் தளபதி பிரிக் ஜெனரல் ஒமர் கான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெனிசுலா அருகே கயானா ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அலி தெரிவித்துள்ளார். மேலும் சீருடை அணிந்த சில சிறந்த மனிதர்களின் துயரமான இழப்பைக் கண்டு என் இதயம் வலிக்கிறது, சோகத்தில் மூழ்குகிறது என்றும் குடும்பங்களுக்கும், நமது நாட்டிற்கும், ராணுவம் மற்றும் எனக்கும் தனிப்பட்ட முறையில் இந்த இழப்பின் அளவு அளவிட முடியாதது என்றும் அவர் கூறினார்.

இதன்படி விபத்துக்குள்ளான பெல் 402 ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த ஏழு கயானா பாதுகாப்புப் படை (ஜிடிஎப்) வீரர்களில் ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இறந்தவர்கள் லெப்டினன்ட் கர்னல், மைக்கேல் சார்லஸ், லெப்டினன்ட் கர்னல் மைக்கேல் ஷாஹூத், ஓய்வு பெற்ற பிரிகேடியர், கேரி பீட்டன், லெப்டினன்ட் கர்னல், சீன் வெல்கம் மற்றும் சார்ஜென்ட் ஜேசன் கான் ஆகியோர் அடங்குவர்.

மேலும் கார்போரல் டுவைன் ஜாக்சன் மற்றும் லெப்டினன்ட் ஆண்டியோ க்ராபோர்ட் ஆகிய இருவர் உயிர் பிழைத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமானத்தையும் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மீண்டும் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, நேற்று அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

ராணுவ ஹெலிகாப்டர் வெனிசுலாவின் எல்லையில் இருந்து 30 மைல் தொலைவில் சிக்னலை இழந்ததாக கூறப்படுகிறது, ஆனால் மோசமான வானிலை காரணமாக தேடுதல் இரவில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.