சென்னை: போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த போலி பாஸ்போர்ட்டை, அவரது , மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் […]
