திருச்சி தென்னிலை அருகே உள்ள ஆப்பீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர், அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விடுவது, செவிலியர்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அனுப்புவது என்று தொழில் செய்து வந்ததால், ‘ஆம்புலன்ஸ்’ பிரபாகரன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். இந்நிலையில், திருட்டு வாகனங்களை வாங்கி, அந்த வாகனங்களை வேலை செய்து மாற்றி விற்பது, வாகனங்களை திருடுவது என்று இல்லீகல் தொழிலும் செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் பிரபாகரனை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வந்தனர்.

இவர்மீது அடிதடி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், ஏமாற்றுதல் என்று பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மெக்கானிக் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்குச் சென்ற இவர், கடந்த மாதம் 20 – ம் தேதி ஜாமீனில் வெளியில் வநது, காலையும், மாலையும் கையெழுத்துப் போட்டு வந்தார். இந்நிலையில்தான், கடந்த 11 -ம் தேதி இரவு அவரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை செய்ததன் அடிப்படையில் ரியாஸ், லட்சுமணன், ராஜேஷ் மற்றும் அப்துல் கபூர் பஷீர் உள்ளிட்ட நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகரனிடம் முன்பு வேலை பார்த்து வந்த அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன்(32) என்பவர் கூறியதால் தான் கொலை செய்ததாக தெரிவித்தனர். அதனடிப்படையில், அப்புவை போலீசஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அப்புவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நான் பிரபுவிடம் பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்தேன். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து வெளியேறி விட்டேன்.

அதோடு, அவர் செய்து வந்த கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை நானும் செய்து வந்தேன். ஆனால், இது பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடும், முன்விரோதமும் ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக பிரபு என்னை கொலை செய்யும் நோக்கத்தில் இருந்து வந்தார். அதற்கு முன்னதாக அவரை கொலை செய்ய வேண்டும் என நான் ஆட்களை வைத்து பிரபுவை கொலை செய்தேன்” என்று போலீஸாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.