
ஹாரி பாட்டர் நடிகர் டேனியலை சந்தித்த மிருணாள் தாக்கூர்
பாலிவுட் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர் 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்ற மராத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடித்த அவருக்கு, தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் மிகப்பெரிய பிரேக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தை அடுத்து நானியுடன் ஹாய் நன்னா என்ற படமும் நல்ல வரவேற்பு ஏற்படுத்தி கொடுத்த நிலையில், தற்போது ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகை ஆகிவிட்டார் மிருணாள். இந்த நிலையில் அவர் ஹாரி பாட்டர் படத்தின் நடிகர் டேனியேலை நேரில் சந்தித்துள்ளார். அவரை தான் சந்தித்த போது எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.