ஹீரோயின் ஆனார் மதுரா

3எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா தயாரித்து இயக்கி உள்ள படம் ஆலன். வெற்றி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவரது ஜோடியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த தபேயா மதுரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளராக நடித்திருந்த இவர் இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இவரது அம்மா இலங்கையை சேர்ந்த தமிழர், அப்பா ஜெர்மனியை சேர்ந்தவர். சட்டம் படித்துள்ள இவர் நடனம், இசை முறைப்படி கற்றுள்ளார். மாடலிங் செய்து வருகிறார். பல இசை ஆல்பங்களில் நடித்துள்ளார்.

ஆலன் படம் குறித்து அதன் இயக்குனர் சிவா கூறும்போது “தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு. அவனின் காதல், 40 வயது வரையிலான அவனது வாழ்வின் பயணம்தான் படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல், ஆன்மீகம், எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலான பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.