வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முதல்வர் ஸ்டாலின் டில்லி பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணம், தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு உள்ளிட்ட விவகரங்கள் குறித்து ஆலோசிக்க பிரதமரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றுள்ளார். இதையடுத்து பிரதமரை சந்திக்க ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.இதன்படி இன்று (டிச.19) இரவு 10.30 மணியளவில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டாலின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி டில்லியிலிருந்து நேரடியாக மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது பயணத்திட்டத்தின் படி பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின் நாளை (டிச.20) காலை சென்னை திரும்புகிறார். சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின் மாலையில் விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து மழை பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்.
21-ம் தேதி தூத்துக்குடியில் முத்வர் ஆய்வு
தூத்துக்குடியில் மத்திய குழுவினர் நாளை (20-ம் தேதி ) ஆய்வு செய்ய உள்ளனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் உடனிருக்க வேண்டி இருப்பதால் வரும் 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement