கிறிஸ்துமஸில் பிடிச்சவங்களுக்கு மொபைல் கிப்ட் பண்ணுங்க… இருக்குது முரட்டு தள்ளுபடி!

Christmas 2023 Gifts: கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே அனைவருக்கும் ஒரு குதூகலமும் வந்துவிடும் எனலாம். கேக் சாப்பிடுவது, பள்ளி – கல்லூரி – அலுவலகங்கள் விடுமுறை ஆகியவற்றுடன் புது வருடம் பிறக்கப்போகும் மகிழ்வையும் கிறிஸ்துமஸ் சேர்த்து கொண்டு வரும். எனவேதான், கிறிஸ்துமஸ் என்ற பெயரை கேட்டாலே டக்கென மனதில் சந்தோஷம் பிறந்துவிடும். 

ஸ்மார்ட்போனை பரிசாக கொடுங்கள்

சந்தோஷமான தருணங்களை பலரும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடனே செலவிட விரும்புவார்கள். அத்தகைய அன்புக்குரியவர்கள் இணையும் போது நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி நினைவுகள் இன்னும் சிறக்க அவர்களுக்கு உபயோகமான அல்லது உங்களை அடிக்கடி நியாபகப்படுத்தும் பொருள்களை பரிசாக கொடுப்பதும் ஏதுவாக இருக்கும், அதுவும் இந்த பண்டிகை காலங்களில் அப்படி உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசு கொடுக்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தாதீர்கள். 

தற்போது அனைவருக்கும் அத்தியவசியமான ஒன்று என்றால் அது ஸ்மார்ட்போன்தான். ஸ்மார்ட்போனை பலரும் குறைந்தது 2-3 வருடங்கள் வரை வைத்திருப்பார்கள், தொடர்ந்து அப்கிரேட் செய்துகொண்டே இருப்பார்கள், அப்படி உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஸ்மார்ட்போன் வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் Realme நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கும் தள்ளுபடிகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளவும். 

கூப்பன் நன்மைகள்

Realme Narzo 60 Pro 5G மொபைல் தள்ளுபடி, கூப்பன் நன்மைகளுடன் பல்வேறு  ஆப்பருடன் வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் இந்த மொபைல் ஒரு கவர்ச்சியான தேர்வாக அமைகிறது. 12ஜிபி RAM மற்றும் 1TB இன்டர்நெல் வேரியண்டின், ஆரம்ப விலை 29 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த மொபைலுக்கு தற்போது 2000 ரூபாய் கூப்பன் தள்ளுபடி இருப்பதால், இப்போது 27 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Realme Narzo 60 Pro 5G  மட்டுமில்லாமல் Realme narzo 60, Realme narzo 60x 5G உடன் இணைந்து, குறைந்த விலையில் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் காட்டுகிறது, அதிக செயல்திறன் கொண்ட சாதனங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது வழங்குகிறது. 8ஜிபி  RAM +128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட narzo 60 5G மொபைலின் அசல் விலை 17 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து இப்போது 15 ஆயிரத்து 499 ரூபாய்க்குக் குறைக்கப்பட்டுள்ளது, 

Realme narzo 60x 5G ஐப் பொறுத்தவரை, 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் இப்போது 12 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது, அதன் கூப்பன் தள்ளுபடி ரூ.1500 ஆகும். Realme narzo N53 மற்றும் Realme narzo N55 உடன், பல்வேறு விலைகளில் ஆப்ஷன்களை வழங்கும். தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்கள் மூலம் கடும் தள்ளுபடியை வழங்குகிறது. 6ஜிபி+128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜை கொண்ட narzo N55, தற்போது அதன் அசல் 12 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து குறைக்கப்பட்டு ஆயிரத்து 999 ரூபாய் ஆக உள்ளது, மேலும் கூப்பன் நன்மை ரூ. 13 ஆயிரம் உடன் வருகிறது.

இதற்கிடையில், Realme narzo N53 மொபைல் 4ஜிபி+64ஜிபி வேரியண்டில் கிடைக்கும். இது 7 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி விலையில், அதவாது அதன் அசல் விலை 8 ஆயிரத்து 999 ரூபாயாகும். 1,000 ருபாய் கூப்பன் நன்மையுடன் பெறலாம். இவற்றை நீங்கள் Realme ஸ்டாரிலும், அமேசானிலும் வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.