Rose exhibition starts tomorrow | ரோஜா கண்காட்சி நாளை துவக்கம்

புதுடில்லி:டில்லி மாநகராட்சி சார்பில், சாணக்யபுரியில் குளிர்கால ரோஜா கண்காட்சி நாளை துவங்குகிறது. நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து, டில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

டில்லி மாநகராட்சி மற்றும் இந்தியா ரோஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து, இரண்டு நாள் குளிர்கால ரோஜா கண்காட்சி நாளை துவங்கி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.

சாணக்யபுரியில் அமைந்துள்ள இந்திய – ஆப்ரிக்க ரோஜா பூங்காவில் நடக்கும் இந்தக் கண்காட்சியில், ஏராளமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் –பங்கேற்கின்றனர். விதவிதமான ரோஜா பூக்கள் மற்றும் பூந்தொட்டிகள் கண்காட்சியில் இடம்பெறும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.