Rewind 2023 இந்திய அரசியல்: பிபிசி ஆவணப்படம், மணிப்பூர் கலவரம் டு நாடாளுமன்ற சர்ச்சைகள் வரை..!

ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை வேண்டும்’ என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர்.

ஜனவரி 24: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் ‘கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது’ என அறிக்கை வெளியிட்டது.

ஜனவரி 30: ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 136 நாள்களுக்கு பிறகு காஷ்மீரில் நிறைவுபெற்றது.

பிப்ரவரி 8: நாடாளுமன்றத்தில் “அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன உறவு?” என ராகுல் காந்தி கேள்வி கேள்வி எழுப்பினார். இது நீண்ட காலம் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டது.

பிப்ரவரி 15: டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

பிப்ரவரி 26: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 3: பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்தில் வெற்றிபெற்றது.

மார்ச் 23: ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். அதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 23: காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை ஆதரவாளரான அம்ரித்ப்பால் சிங் காவல்துறையிடம் சரணடைந்தார்.

மே 3: மணிப்பூரில் மெய்த்தி இன மக்களுக்கும் குக்கி பழங்குடி சமூகத்திற்கும் இடையே இன வன்முறை வெடித்தது.

மே 10: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 135 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

மே 19: புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வாங்கி திரும்ப பெற்றது.

மே 26: புதிய நாடாளுமன்றம் கட்டடம் செங்கோல் வைக்கப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

ஜூன் 18: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைத்த இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.

ஜூலை 5: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஜூலை 11: `அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி மூன்றாவது முறையாக நீட்டிப்பு செய்வது சட்டவிரோதமானது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மணிப்பூர் பெண்கள்

ஜூலை 19: மணிப்பூரில் பழங்குடி சமூகப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி

ஆகஸ்ட் 7: ராகுல் காந்தி பதவி பறிப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 23: ஜூலை 14-ம் தேதி புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாள்கள் பயணத்திற்குப் பிறகு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

செப்டம்பர் 9: G20 உச்சி மாநாட்டின் அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என்று இடம்பெற்றது விவாத பொருளானது.

செப்டம்பர் 19: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 19: கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா இந்தியா மீது குற்றம்சாட்டியது.

அமைச்சர் சந்திர பிரியங்கா

அக்டோபர் 10: ‘சாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்குள்ளாவதாக உணர்கிறேன்’ என புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தார்.

அக்டோபர் 29: கேரள மாநிலம் எர்ணாகுளம், களமச்சேரியில், கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி. டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

நவம்பர் 09: ‘இந்திய ஊடகவியலாளர்கள் பெகாசஸ் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள்’ என OCCRP குற்றச்சாட்டியது.

நவம்பர் 11: அமெரிக்காவில் வாழும் சீக்கியத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சித்தது தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி கைது.

நவம்பர் 24: ஆப்கானிஸ்தான் அரசு இந்தியாவிலிருக்கும் தங்களின் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தது.

டிசம்பர் 3: 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வும், தெலங்கானாவில் காங்கிரஸும் வெற்றிபெற்றது.

டிசம்பர் 8: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதான குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

டிசம்பர் 11: `ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து, மசோதா 2019 செல்லும்’ என உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

தந்தை பெரியார்

டிசம்பர் 12: ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு குறித்த விவாதத்தின் போது நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

டிசம்பர் 13: நாடாளுமன்றத்தில் அத்துமீறிய இருவரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

டிசம்பர் 19 – நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக கேள்வி எழுப்பிய 141 எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். .

டிசம்பர் 19 – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர்போல மிமிக்ரி செய்ததால் சர்ச்சை வெடித்தது.

டிசம்பர் 21: பிரிஜ் பூஷன் நண்பர் சஞ்சய் சிங் WRI தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டிசம்பர் 21: இந்தியாவில் எதிர்கட்சிகள் இல்லாமல்(பெரும்பாலானோர் சச்பெண்ட் செய்யப்பட்டனர்), விவாதம் இல்லாமல் மூன்று குற்றவியல் சட்ட மசோதா தக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.