சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் இன்று மாலை தேமுதிக கட்சியின் அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கடைசியாக அவரது முகத்தை பார்த்துவிடுவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் சென்னைக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்தவர் விஜயகாந்த். பார்ப்பதற்கு எளிய தோற்றத்தில் இருந்ததாலோ என்னவோ அவரை மக்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான்
