சென்னை: நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலில் தேமுதிக அலுவலகத்திலும் பின்னர் தீவுத்திடலிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல், பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
