One lakh Tirupati laddus to be distributed during Ayodhya Ram mandir consecration ceremony | ராமர் கோயிலுக்கு ஒரு லட்சம் லட்டு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பதி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து தலா ஒரு லட்சம் லட்டுக்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினருக்கும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஒரு லட்சம் லட்டுக்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

இது குறித்து அதன் நிர்வாக அதிகாரி ஏ.வி தர்மா ரெட்டி கூறுகையில், ”ஜன.,22ல் ராமர் கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்காக முழு தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது. கடவுள் வெங்கடேஸ்வரரும், ராமரும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்கள். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தலா 25 கிராம் எடைக்கொண்ட ஒரு லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்படும்” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.